ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்ற போவது யார்.? இதற்கு முன்பு நடந்த இறுதிப்போட்டிகளில் மும்பையின் ஆதிக்கம் என்ன.?

ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்ற போவது யார்.? இதற்கு முன்பு நடந்த இறுதிப்போட்டிகளில் மும்பையின் ஆதிக்கம் என்ன.?



who will won final ipl 2020

ஐபிஎல் T20 கிரிக்கெட் தொடரின் 13 ஆவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந் தேதி தொடங்கியது. அபுதாபி, துபாய், சார்ஜா ஆகிய நகரங்களில் அரங்கேறிய லீக் ஆட்டங்கள் முடிவில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

13 வருட ஐபில் வரலாற்றில் முதல் முறையாக டெல்லி அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதல் முறையாக இறுதி போட்டிக்கு சென்றுள்ள டெல்லி அணி நடப்பு சாம்பியனான மும்பை அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றுமா என டெல்லி அணி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ipl

ஐ.பி.எல் கோப்பையை யார் கைப்பற்றுவது? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்று இரவு நடைபெறுகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுவதற்கு காத்திருக்கின்றனர்.

இதற்க்கு முன்னர் 4 முறை அதாவது 2013, 2015, 2017, 2019 ஆகிய வருடங்களில் ஐ.பி.எல் கோப்பையை வென்று ஆதிக்கம் செலுத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 2010-ம் ஆண்டில் மட்டும் இறுதிப்போட்டியில் தோல்வியை சென்னை அணியிடம் சந்தித்தது. மற்றபடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற எல்லா ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் மும்பை வெற்றிபெறுமா.? முதல் முறையாக இறுதி போட்டிக்கு சென்றுள்ள டெல்லி அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றுமா என்ற ஆவலுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.