
who will play in final match
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் நேற்று நாட்டிங்காமில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுவதாக இருந்த 18 ஆவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களாகவே நாட்டிங்காமில் வெளுத்து வாங்கும் மழை நேற்று போட்டி துவங்குவதற்கு முன்னே பெய்ய ஆரம்பித்தது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. சிறிது நேரம் மழை நின்றதும் நடுவர்கள் மைதானத்தில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் சிறிதாக பெய்துகொண்டிருந்த மழை கனமழையாக மாறியது. இதனால் போட்டியினை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் அணிகள் எவை என்பதை கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கணித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுந்தர் பிச்சை இது குறித்து பேசுகையில், இந்தியாவும் இங்கிலாந்தும் இறுதிப்போட்டியில் மோதும் என தான் நினைப்பதாகவும், அதேபோல் ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும் சிறப்பாக ஆடிவருவதாகவும் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement