இந்தியா விளையாட்டு WC2019

இன்றும் மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்?

Summary:

who will go to final


உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால், இன்று மீண்டும் நடைபெறுகிறது. ஒருவேளை இன்றும் மழையால் தடைபெற்றால்   இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் நேற்று டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஆட்டம் நடைபெறாது என ஐசிசி அறிவித்தது. இந்தநிலையில் நாளை (புதன் கிழமை) ஆட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது. அதாவது நேற்று எந்த ஓவரில் ஆட்டம் நிறுத்தப்பட்டதோ அதே ஓவரில் இருந்து மீண்டும் ஆட்டம் தொடரும். புதிதாக ஆட்டம் நடைபெறாது. இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மதியம் 3 மணியளவில் தொடரும்.

இந்தநிலையில் இன்றும் மழை பெய்து, அரையிறுதி போட்டி ரத்துசெய்யப்பட்டால், லீக் சுற்றில் முன்னிலையில் இருக்கும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் புள்ளிப்பட்டியலில் முதலிடம் இருக்கும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement