தோனியின் திடீர் அதிரடியால் அதிர்ச்சியான விராட்கோலி! வைரல் வீடியோ!



viratkholi-shocked-dhoni-surprise-six-video

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஆத்ரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்து. இந்திய அணி வீரர் தவான் அதிகபட்சமாக 117 ரன்கள் எடுத்தார்.

ரோஹித் சர்மா, விராட்கோலி, தோணி, பாண்டியா, KL ராகுல் என களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஆத்ரேலியா அணியின் பந்து வீச்சை பிரித்து மேய்ந்தனர். இந்நிலையில் விராட்கோலி மற்றும் தோணி இருவரும் ஆடிக்கொண்டிருக்கையில் அப்போது ஆஸ்திரேலியா அணி வீரர் ஸ்டார்க் போட்ட பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார் தோணி.

World cup 2019

தோனியின் இந்த அதிரடி சிக்ஸரை சற்றும் எதிர்பார்த்த விராட்கோலி தோனியின் சிக்ஸரை வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தார். அதுமட்டும் இல்லாமல், தோணி சிக்ஸர் அடித்தததும் விராட்கோலி சிரித்துக்கொண்டே வந்து தோனியிடம் பேசிக்கொண்டிருந்தார்.