இந்தியா விளையாட்டு

அசைவ உணவிலிருந்து விராட் கோலி சைவ உணவுக்கு மாறியது ஏன்.? விராட் ஓப்பன் டாக்!

Summary:

Virat talk about his lifestyle

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. கொரோனாவால், உலகமே முடங்கியுள்ள நிலையில் பல நாடுகளுக்கு சென்று விளையாடி வந்த கிரிக்கெட் வீரர்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி முக்கிய விளையாட்டு வீரர்களை தொடர்புகொண்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால் ரசிகர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க சமூகவலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் விளையாட்டு வீரர்கள்.

இதையடுத்து கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இங்கிலாந்து முன்னாள் வீரர் பீட்டர்சன் இந்திய கேப்டன் விராட் கோலியுடன் பேசியுள்ளார். அப்போது கோலி தான் ஏன் அசைவ உணவுப் பழக்கத்தில் இருந்து சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறினேன் எனக் கோலி கூறியுள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில், 2018 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அசைவ உணவுகளை சாப்பிட்டு வந்தேன். ஒரு முறை எனது கழுத்து எலும்பில் வலி ஏற்பட்டு சோதனை செய்த போது எனக்கு யூரிக் அமிலம் அதிகமாக சுரப்பது கண்டறியப்பட்டது.

அதனால் நான் சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறினேன். அதன் பின் அமில சுரப்பு சமநிலையில் இருக்கிறது. இப்போது சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறி 2 ஆண்டுகள் ஆகின்றன. என் வாழக்கையில் எடுத்த சிறந்த முடிவாக இதை நான் கருதுகிறேன்.

தற்போது ஒவ்வொரு நாள் காலையிலும் புத்துணர்ச்சியாக உணர்கிறேன். ஒரு போட்டியின் சோர்வில் இருந்து விரைவாக மீள முடிகிறது. டெஸ்ட் போட்டியின் சோர்வில் இருந்து ஒரே நாளில் என்னால் மீள முடியும் எனக் கூறியுள்ளார். தற்போதைய நிலைமையில், சைவ உணவுப் பழக்கத்துக்கு நான் ஏன் முன்பே மாறவில்லை என நினைக்கிறேன். இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பே சைவத்துக்கு மாறியிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.


Advertisement