தேவையில்லாமல் பேசி சர்ச்சையில் மாட்டிக்கொண்ட விராட் கோலி!. கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!.

தேவையில்லாமல் பேசி சர்ச்சையில் மாட்டிக்கொண்ட விராட் கோலி!. கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!.



virat kohli wrongly talk to cricket fan


கிரிக்கெட் ரசிகரை நாட்டை விட்டு வெளியேறுமாறு விராட் கோலி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரது இந்த செயல் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தனக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களை விட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களின் ஆட்டத்தை காணவே பிடிக்கும் என கூறியிருந்தார்.

அதற்கு பதிலளித்த விராட் கோலி அந்த ரசிகரை இந்தியாவில் வாழக் கூடாது என்றும், மற்ற நாடுகளை நேசித்தால் எதற்கு நம் நாட்டில் இருக்கிறாய்? வேறு நாட்டிற்கு சென்று ஏன் வாழக்கூடாது? என பதிலளித்துள்ளார்.



 

விராட் கோலியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து நெட்டிசன்கள் அவருக்கு சரமாரியாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விராட் கோலியின் கருத்தால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தியடைந்துள்ளது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அனிருத் சவுத்ரி கூறுகையில், ‘கிரிக்கெட் வாரியம் ரசிகர்களை மதிக்கிறது. அவர்களின் தேர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நான் சுனில் கவாஸ்கர் பேட்டிங்கை ரசிப்பேன்.

மேலும் விவியன் ரிச்சட்ஸ், கிரீனிட்ஸ், தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ் ஆடுவதையும் ரசிப்பேன். சச்சின், சேவாக்கை போலவே மார்க் வாஹ், பிரையன் லாரா உட்பட பலரின் ஆட்டங்களை ரசிப்பேன். நாடு மற்றும் அரசியலைக் கடந்தது சிறப்பான கிரிக்கெட்டை மதிக்கும் பண்பு வேண்டும் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்