அவுட்டாகமல் இருக்க இங்கிலாந்து வீரர் செய்த மோசமான செயல்.! கடுப்பான விராட் கோலி செய்த காரியம்.! வைரல் வீடியோ.!

அவுட்டாகமல் இருக்க இங்கிலாந்து வீரர் செய்த மோசமான செயல்.! கடுப்பான விராட் கோலி செய்த காரியம்.! வைரல் வீடியோ.!


Virat Kohli complains to umpire

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஷர்துல் தாக்குர், உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டனர். சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இந்த டெஸ்டிலும் வாய்ப்பில்லை. அதேபோல் இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர், சாம் கர்ரன் ஆகியோருக்கு பதிலாக ஆலி போப், கிறிஸ் வோக்ஸ் இடம் பிடித்தனர்.

இந்தநிலையில் நேற்றைய ஆட்டத்தில் ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 191 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது. ஷர்துல் தாகூர் 36 பந்தில் 57 ஓட்டங்கள் எடுத்து இந்திய அணியின் மானத்தை காப்பாற்றினார்.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சில் இருந்து தப்பிப்பதற்காக இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான ஹஸீப் ஹமீது  பேட்டிங்கின் கிரீசில் இருந்து, பந்து வீசும் கார்ட் பகுதியில், தன்னுடைய ஷு காலால் அதை மார்க் செய்வதாக கூறி சேதப்படுத்துவது போன்று செய்தார்.

இதனை கவனித்த விராட் கோலி உடனடியாக இது குறித்து நடுவரிடம் கூறினார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. ஆனாலும்  ஹஸீப் ஹமீது 12 பந்துகள் சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்து வீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.