அட!! 50 ரன் அடித்ததும் விராட்கோலி அப்படி ஒரு ரியாக்சன் கொடுக்க இதுதான் காரணமா!! வைரல் வீடியோ..Virat kholi viral reaction after scoring 50 viral video

நேற்றைய போட்டியில் 50 ரன் அடித்ததும் விராட்கோலி கொடுத்த ரியாக்சன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஐபில் 14 வது சீசன் T20 போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மும்பையில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்தது.

அதிகபட்சமாக ராஜஸ்தான் வீரர் சிவம் தூபே 46 ரன்களும், ராகுல் திவேட்டியா 40 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து 178 என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் படிக்கல் மற்றும் கேப்டன் விராட்கோலி இருவரும் தொடக்கம் முதல் அதிரடியாக ஆடி, 16.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் அடித்து அணியை வெற்றிபெற செய்தனர்.

IPL 2021

இதனிடையே நேற்றைய போட்டியில் தனது 50 வது ஐபில் அரைசதத்தை கடந்த விராட்கோலி, அரைசதம் அடித்த கையோடு பெவிலியனில் இருந்த தன்னுடைய அன்பு மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகளை நோக்கி கையசைத்து காட்டி பறக்கும் முத்தத்தை  அனுப்பினார்.

அதுமட்டும் இல்லாமல் இந்த அரைசதம் தனது அன்பு மகளுக்கு சமர்ப்பணம் என்பதுபோலிம் மைதானத்திற்குலையே செய்கை செய்து காண்பித்தார் விராட்கோலி. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.