நேற்று நடந்த ஆட்டத்தில் அஸ்வினை பயங்கரமாக கலாய்த்த விராட் கோலி! வைரல் வீடியோ!
நேற்று நடந்த ஆட்டத்தில் அஸ்வினை பயங்கரமாக கலாய்த்த விராட் கோலி! வைரல் வீடியோ!

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 35 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், மும்பை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இந்நிலையில் கொல்கத்தா, பெங்களூர் அணிகள் இடையே நடந்த நேற்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி 10 ரன் விதித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா அணி வீரர் சுனில் நரைன் ஆட்டத்தின் 18-வது ஓவரை வீசினார். அப்போது அந்த ஓவரின் கடைசி பந்தை சுனில் நரை வீச வந்த போது, பந்தை வீசாமல் நின்று கொண்டார்.
பவுலர் முனையில் நின்ற விராட் கோலி, அஷ்வினின் மன்கட் முறையை நினைவு படுத்தும் விதமாக கேலியாக கிரீசின் உள்ளே தான் இருக்கிறேன் என்பது போல் பேட்டை அடித்து காட்டினார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் ஆக்ரோஷமாக கோஷமிட்டனர். அப்போது கோலி 80 ஓட்டங்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி ஓவரின் இறுதி பந்தில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி 100 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.