இந்தியா விளையாட்டு

யார் உண்மையான ஹீரோக்கள்? விராட், கவுதம் காம்பீரின் கம்பீர பேச்சு!

Summary:

Virat and goutham gambir talk about real heros

ராணுவ வீரர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் என்று விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். 

காஷ்மீரின் ஹந்த்வாரா என்ற இடத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் இந்திய 2 ராணுவ அதிகாரிகள் உள்பட பாதுகாப்பு படையினர் 5 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்தநிலையில், வீரமரணமடைந்த பாதுகாப்பு படையினருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், டெல்லி எம்.பி.யுமான கவுதம் கம்பீர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விராட்கோலி தனது டுவிட்டர் பதிவில், ‘எந்தவொரு சூழ்நிலையிலும் கடமையை மறக்காதவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள். அவர்களின் தியாகத்தை மறக்கக்கூடாது. ஹந்த்வாரா சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினருக்கு நான் தலை வணங்குகிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 


அதேபோல் கவுதம் கம்பீர், உண்மையான ஹீரோ யார் என்றால் அது நடிகரோ, விளையாட்டு வீரரோ, அரசியல்வாதியோ கிடையாது. எப்பொழுதும் ஒரு உண்மையான ஹீரோ ராணுவ வீரர் மட்டும் தான் என தெரிவித்துள்ளார். 


Advertisement