கோலிக்காக ஒரு பக்கம் வார்த்தை யுத்தமே நடக்குது.. ஆனா எதுவுமே தெரியாத மாதிரி அவர் மட்டும் என்ன பண்றாரு பாருங்க!

கோலிக்காக ஒரு பக்கம் வார்த்தை யுத்தமே நடக்குது.. ஆனா எதுவுமே தெரியாத மாதிரி அவர் மட்டும் என்ன பண்றாரு பாருங்க!


Virat again releases one ad

சமீபகாலமாக சர்வதேச அரங்கில் விராட் கோலியின் பேட்டிங் சரிவர எடுபடவில்லை. இதுவரை 70 சர்வதேச சதங்கள் அடித்துள்ள விராட் கோலி கடந்த மூன்று வருடங்களாக ஒரு சதம் அடிக்காதது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை‌ தொடர்ந்து விராட் கோலியின் தற்போதைய பேட்டிங் நிலையை குறித்து பல கிரிக்கெட் விமர்சகர்களும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், விராட் கோலி டி20 போட்டிகளில் இருந்து விலகி விடலாம் எனக் கூறியிருந்தார்.

virat kholi

கபில் தேவின் இந்த கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாளுக்கு நாள் இதேபோன்று விராட் கோலியை மையமாக வைத்து பல மாறுபட்ட கருத்துக்கள் வெளிவருகின்றன். 

ஆனால் இதைப்பற்றியெல்லாம் விராட் கோலி கண்டுகொள்வதாக தெரியவில்லை. எந்த கவலையும் இல்லாமல் வழக்கம்போல விளம்பரங்களில் நடித்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்வதையே முக்கிய வேலையாக கொண்டுள்ளார். இன்றும் புதிதாக ஒரு விளம்பரத்தை விராட் கோலி வெளியிட்டது ரசிகர்களை மேலும் எரிச்சலடைய செய்துள்ளது.