சட்டையில்லாமல் 'சிக்ஸ் பேக்' உடலை காட்டும் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர்! பாராட்டித்தள்ளும் ரசிகர்கள்!

சட்டையில்லாமல் 'சிக்ஸ் பேக்' உடலை காட்டும் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர்! பாராட்டித்தள்ளும் ரசிகர்கள்!


vijay-sankar-6-pack


இந்திய அணி வீரரும், தமிழகத்தை சேர்ந்த வீரருமான விஜய் சங்கர் வெளியிட்ட 6 பேக் புகைப்படத்தை விமர்சித்தும், கிண்டலடித்தும் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்-ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் சட்டையில்லாமல் தனது 6 பேக் உடலின் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டார். அவரது பதிவிற்கு ரசிகர்கள் ட்ரோல் செய்துள்ளனர். அவர் முதலில் குண்டாக இருந்து பின்னர், கட்டுடலாக ஆனதாக அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம் பிடித்திருந்த விஜய் சங்கருக்கு உடலில் இரண்டு முறை காயம் ஏற்பட்டதால் தொடர்ந்து விளையாட முடியாமல் இந்தியா திரும்பினார். தமிழக வீரர் இந்திய அணியில் ஆடினால் அதிகப்படியான ரசிகர்கள் அந்த வீரருக்கு இருப்பது வழக்கம்.

அந்தவகையில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு அதிகப்படியான ரசிகர்கக்ள் உள்ளனர். இந்தநிலையில் ஆரம்பத்தில் அவரது உடலமைப்பு விளையாட்டு வீரர்களுக்கு இருப்பது போன்று இருக்காது. ஆனால் தற்போது கடுமையான உடற்பயிற்சி மூலம் "6 பேக்" உடலை உருவாக்கியுள்ளார் விஜய் சங்கர். இந்த பதிவிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.