இந்தியா விளையாட்டு

நியூசிலாந்து வீரர்களை குழப்ப இந்திய வீரர் செய்த செயல்! விராட் கோலியை எச்சரித்த நடுவர்! வைரல் வீடியோ!

Summary:

umbire warning to virat

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20, ஒரு நாள், டெஸ்ட் உள்ளிட்ட 3 தொடர்களில்  டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றிய நிலையில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் அபார வெற்றிபெற்றது. போட்டியின் போது நியூசிலாந்து வீரர்கள் பந்தை அடித்து விட்டு ஒரு ஓட்டம் எடுக்க ஓடிய போது களதடுப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய வீரர் ஒருவர் அவர்களை குழுப்ப ‘இரண்டு’ என கத்தியுள்ளார்.

இந்திய வீரர் அவ்வாறு கத்தியது பேட்ஸ்மேன்களை குழப்பும் விதமான உத்தியாக இருந்தது. போட்டியின் போது வீரர்கள் இதுபோன்று செயல்படுவது விதிமீறிய செயலாகும். ஆனாலும், சுதாரித்துக்கொண்ட நியூசிலாந்து வீரர்கள் ஒரு ஓட்டத்துடன் நின்றனர். 

இந்திய வீரரின் செயலால் கடுப்பான களநடுவர், அணித்தலைவர் விராட் கோலியை எச்சரித்துள்ளார். களநடுவர் கெட்டல்பரோ விராட் கோலியை எச்சரித்தது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 


Advertisement