
Tom moody names warner and rohit as best openners
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உறையாடி வருகின்றனர்.
ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, கெவின் பீட்டர்சன் போன்றோர் இன்ஸ்டாகிராமில் லைவ் சாட் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தனர். இந்த வரிசையில் தற்போது சன் ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அதில் அவரிடம் டி20 போட்டிகளில் சிறந்த துவக்க ஆட்டக்காரர்கள் யார் யார் என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள அவர் டேவிட் வார்னர் மற்றும் ரோகித் சர்மா இருவரும் சிறந்த துவக்க ஆட்டக்காரர்கள் என கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டரான அவரிடம் கேட்கப்பட்ட மற்றொரு கேள்வியான, இந்தியாவின் தற்போதைய சிறந்த இளம் வீரர் யார் என்ற கேள்விக்கு சுபம் கில் என பதிலளித்துள்ளார்.
Tough call, but I would be more than happy with @davidwarner31 and @ImRo45
— Tom Moody (@TomMoodyCricket) April 4, 2020
Advertisement
Advertisement