இன்றைய ஆடுகளம் எப்படி? இந்திய அணிக்கு சாதகமாக அமையுமா!

இன்றைய ஆடுகளம் எப்படி? இந்திய அணிக்கு சாதகமாக அமையுமா!


Todays semifinal pitch report

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டியானது மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு ட்ரஃப்போர்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி 2 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றது. இந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதே மைதானத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆடிய நியூசிலாந்து அணி கடைசி நேரத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் திகில் வெற்றி பெற்றது.

wc2019

இந்த தொடரின் இரண்டாம் கட்டத்தில் பெரும்பாலும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிட்சுகளில் தான் ஆட்டம் நடைபெற்றதால் இரண்டாவதாக பேட்டிங் செய்தவர்களால் அதிகமாக ரன் எடுக்க முடியவில்லை. இதனால் கடந்த 20 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டும் தான் இரண்டாவதாக பேட்டிங் செய்தவர்கள் வெற்றிபெற முடிந்தது. ஆனால் இன்றைய போட்டியில் புதிய பிச் தான் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியே புதியதாக இருந்தாலும் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்வதுதான் சிறந்தது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வலிமையான பேட்டிங் வரிசையை கொண்டுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் நிச்சயம் ஒரு இமாலய இலக்கை நிர்ணயிக்க முடியும் எனவும் கூறியுள்ளனர்.

wc2019

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை இதுவரை 7 அரைஇறுதி ஆட்டங்களில் ஆடி ஒரே ஒருமுறை தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்த முறை மீண்டும் பழைய கதை போல்தான் நீடிக்குமா அல்லது கடந்த உலகக் கோப்பையை போன்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதுவரை 6 முறை அரையிறுதியில் ஆடியுள்ள இந்திய அணி 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.