இந்தியா விளையாட்டு WC2019

இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கே சாதகம்! சந்தோஷத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!

Summary:

today match for indian team


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் நேற்று மான்செஸ்டறில் நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் இன்று (புதன் கிழமை) போட்டி தொடரும் என அறிவிக்கப்பட்டது. இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் மான்செஸ்டரில் அதிகாலையில் இருந்து வெயில் அடித்து வருகிறது. அங்கு மிதமான, ஈரப்பதமான வானிலையே அங்கு நிலவி வருகிறது. இந்திய நேரப்படி 7 மணிக்கு பிறகு மழை பெய்ய வாய்ப்புள்ளது. பெரும்பாலும் 7 மணிக்கே போட்டி முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் மழை காரணமாக பாதிக்கப்பட்டாலும். மழையும் நீண்ட நேரம் பெய்ய வாய்ப்பில்லை என்றே வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலையே மைதானம் நன்றாக உலர்ந்துவிட்டதால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும்.


Advertisement