இன்றைய ஆட்டத்தில் நடக்கவிருக்கும் சுவாரஸ்யம்! எந்த அணிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 11 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணி தலா நான்கு புள்ளிகளுடன் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளது.
நேற்று நடைபெறவிருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த ஆட்டம் மழையினால் ரத்தானது. இதனையடுத்து இரு அணியினருக்கும் தல ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று நடக்கவிருக்கும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணி மோதுகிறது. உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து-வங்கதேச அணிகள் இதுவரை மூன்று போட்டிகளில் மோதியுள்ளது. அதில் இரண்டு போட்டியில் வங்கதேச அணியும், ஒரு போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது.
இந்தநிலையில், இன்றைக்கு நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றால் இரண்டுக்கு, இரண்டு என்ற கணக்கில் சமமாகும். எனவே இதனை சமன்செய்ய இந்த போட்டியில் வென்றே ஆகவேண்டும் என்ற நோக்கில் இங்கிலாந்து அணியும், அதனை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கில் வங்கதேச அணியும் இந்த போட்டியை எதிர்கொள்கிறது. இதனை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.