
test ranking - viraht kohli beat williamson
டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் விராட் கோலியின் இடத்தை நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் பிடிக்க உள்ளார்.
சமீபத்தில் ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார். இந்நிலையில் அவருடைய இடத்தை நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் நெருங்கி வருகிறார்.
தற்சமயம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டாம் இடத்தில் இருந்த வில்லியம்சன் அந்த அணிக்கு எதிராக 200 ரன்கள் அடித்த நிலையில் கூடுதல் புள்ளிகள் பெற்று விராட் கோலியை விட 7 புள்ளிகள் மட்டுமே குறைவாக உள்ளார். தற்சமயம் வில்லியம்சன் 915 புள்ளிகளுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்திற்கு எதிராக இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ள நிலையில், இதில் வில்லியம்சன் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் விராட் கோலியின் நம்பர் 1 இடத்தை வில்லியம்சன் பிடிப்பார்.
இது நடக்கும் பட்சத்தில் அடுத்த ஒரு ஆண்டு வரை விராட் கோலியால் மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடிக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில், இந்தியா அணி ஐபிஎல் தொடருக்கு பின் உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ளது.
Advertisement
Advertisement