இந்தியா உலகம் விளையாட்டு Covid-19

ஷாக்கான சாய்னா! இந்தியர்கள் பங்கேற்ற தொடரில் விளையாடிய தைவான் சிறுமிக்கு கொரோனா!

Summary:

Taiwan girl got corono positive played with indian shuttlers

இந்திய வீராங்கனைகளான சாய்னா நேவால், பிவி சிந்து மற்றும் லக்சியா ஷென் பங்கேற்ற இங்கிலாந்து தொடரில் விளையாடிய 10 வயது தைவான் வீராங்கனைக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்திய இறகுப்பந்து வீராங்கனைகளான சாய்னா நேவால், பிவி சிந்து மற்றும் லக்சியா ஷென் ஆகியோர் கடந்த வாரம் வரை இங்கிலாந்தில் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து இறகுபந்து தொடரில் கலந்துகொண்டனர். இதே தொடரில் தைவானை சேர்ந்த 10 வயது சிறுமி ஹான்ஸ் கிறிஸ்டியன் என்பவரும் கலந்துகொண்டார்.

தற்போது நாடு திரும்பிய அந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கடந்த வெள்ளிக்கிழமை உறுதியாகியுள்ளது. இந்த தகவலினை தைவான் நாட்டின் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை கேட்ட இந்திய வீராங்கனைகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். ட்விட்டரில் பதிவிட்டுள்ள சாய்னா, "மிக மிக அதிர்ச்சியாக உள்ளது" என கூறியுள்ளார்.


Advertisement