டி-20 உலகக்கோப்பை தொடர்: இலங்கை, நெதர்லாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!.. இந்திய அணிக்கு தொடரும் சோகம்..!

டி-20 உலகக்கோப்பை தொடர்: இலங்கை, நெதர்லாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!.. இந்திய அணிக்கு தொடரும் சோகம்..!


T-20 World Cup Series Sri Lanka, Netherlands advance to next round

எட்டாவது உலகக் கோப்பை டி-20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் தகுதி சுற்று போட்டிகளில் குரூப் –ஏ பிரிவில் நமிபியா, நெதர்லாந்து, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப்-பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

தகுதி சுற்று போட்டிகளை பொறுத்தவரை குரூப்-ஏ பிரிவில் அனைத்து ஆட்டங்களும் முடிவடைந்துள்ளன. அந்த பிரிவில் இருந்து 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த இலங்கை அணியும், 2 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் 2 வது இடம் பிடித்த நெதர்லாந்து அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

குரூப்-பி பிரிவில் 3 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், அவை இன்று நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் கிடைக்கும் முடிவுகளை பொறுத்து முதல் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். தற்போது இந்திய அணி பங்கு பெற்றுள்ள பிரிவில் குரூப்-ஏ பிரிவில் 2 ஆம் இடம் பெற்ற நெதர்லாந்து அணி இடம் பெற்றது.

இன்று நடைபெறும் போட்டிகளின் முடிவில் அந்த பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணி இந்திய அணி இடம்பெற்றுள்ள பிரிவில் இடம்பெறும். தகுதி சுற்றில் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இலங்கை அணி ஆஸ்திரேலியா பங்குபெற்றுள்ள பிரிவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.