விளையாட்டு

என்னங்க இது!! சுரேஷ் ரெய்னா பேட்டிங் ஆட வந்தபோது டிவி முன்பாக ரசிகர் செய்த காரியத்த பாருங்க!! வைரல் வீடியோ..

Summary:

சுரேஷ் ரெய்னா விளையாட வந்தபோது டிவி முன்பாக ரசிகர் ஒருவர் அவருக்கு ஆரத்தி எடுத்த வீடியோ கா

சுரேஷ் ரெய்னா விளையாட வந்தபோது டிவி முன்பாக ரசிகர் ஒருவர் அவருக்கு ஆரத்தி எடுத்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

சென்னை - டெல்லி அணிகள் இடையே நடந்த போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 54 ரன்கள் அடித்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் தொடக்கம் முதலே அபாரமாக ஆடி, 18.4 ஓவர்கள் முடிவில் 190 ரன்கள் அடித்து வெற்றிபெற்றனர். இந்நிலையில் சென்னை அணி பேட்டிங்கின்போது சுரேஷ் ரெய்னா கிரீசுக்கு வந்தபோது அவரது ரசிகர் ஒருவர், டிவி முன்பாக அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார்.

சென்னை அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் சுரேஷ் ரெய்னா கடந்த ஐபில் சீசனில் அணியில் இருந்து வெளியேறினார். தற்போது அவர் மீண்டும் சென்னை அணிக்கு வந்திருக்கும்நிலையில், அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார் ரசிகர் ஒருவர்.


Advertisement