நூலிழையில் வெற்றியை தவறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.! கெத்து காட்டிய சன்ரைசர்ஸ்.!

19.4 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.


sunrisers-hyderabad-won-rcb

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் இன்று  நடக்கும் நாக் அவுட் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இன்று மோதியது. இந்த ஆட்டத்தில் தோல்வியடையும் அணி போட்டியை விட்டு வெளியேறும். இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

இதனையடுத்து பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் படிக்கல் களமிறங்கினார். விராட் 6 ரன்கள் எடுத்த நிலையிலும், படிக்கல் 1 ரன் எடுத்த நிலையிலும் ஹோல்டர் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினர். இதனையடுத்து களமிறங்கிய பின்ச் 30 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தநிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.அந்த அணியின் ஏபிடி மட்டும் நிதானமாக ஆடி 43 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தநிலையில்  போல்ட் ஆகி வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை மட்டும் எடுத்து  சன்ரைசர்ஸ் அணிக்கு 132 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி.

rcb

இதனையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்களான வார்னர் மற்றும் கோஸ்வாமி களமிறங்கினர். கோஸ்வாமி ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். வார்னர் 17 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய மனிஷ் பாண்டே நிதானமாக ஆடி 21 பந்துகளில்
24 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார். 

rcb

அடுத்ததாக களமிறங்கிய வில்லியம்சன் 44 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். சன்ரைசர்ஸ் அணியின் ஹோல்டர் 19 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தநிலையில் கடைசியில் ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தை நிறைவு செய்தார். 19.4 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்த ஆட்டத்தின் வெற்றியால் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் மோதவுள்ளது சன்ரைசர்ஸ் அணி. இந்த ஆட்டத்தின் தோல்வியால் 2020 ஐ.பி.எல் போட்டியில் இருந்து வெளியேறுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.