வெறித்தனமாக ரன்-அவுட் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்.! ஆனால் இது இந்திய வீரரின் அசால்ட்டு தான்... வீடியோவை பார்த்து விமர்சிக்கும் ரசிகர்கள்

வெறித்தனமாக ரன்-அவுட் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்.! ஆனால் இது இந்திய வீரரின் அசால்ட்டு தான்... வீடியோவை பார்த்து விமர்சிக்கும் ரசிகர்கள்


subman ghil run out video

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த ஒருநாள்  போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்தது.  

309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்தபோது சுப்மன் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 2 சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் மொத்தம் 64 ரன்கள் எடுத்த நிலையில் 18-வது ஓவரில் அல்ஸாரி ஜோசப் வீசிய நான்காவது பந்தில், அடித்துவிட்டு ஒரு ரன் எடுக்க முயற்சித்தபோது நிக்கோலஸ் பூரன் பந்தை எடுத்து ஸ்டம்பை நோக்கி அடித்தபோது எதிர்பாராத விதமாக சுப்மன் கில் ரன்-அவுட் ஆனார்.


நிக்கோலஸ் பூரன் பந்தை வெறித்தனமாக ஸ்டம்பை நோக்கி அடித்தபோது பந்து நேரடியாக வந்து ஸ்டம்பில்  பட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் சுப்மன் கில் அவுட்டானார். ஆனால்  சுப்மன் கில்லின் அசால்ட்டு தனத்தால் தான் தேவையில்லாத ரன் அவுட் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.