விளையாட்டு WC2019

ஆட்டமிழந்தால் இப்படியா செய்வது! இங்கிலாந்து வீரரின் மோசமான செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி

Summary:

Stokes reacted badly after getting out

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் முப்பத்தி இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஆரோன் பின்ச் 100 மற்றும் டேவிட் வார்னர் 53 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலிய அணி 285 ரன்கள் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் ஆறு ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர் களமிறங்கிய ஸ்டோக்ஸ் மற்றும் நிலைத்து நின்று 89 ரன்கள் எடுத்தார். ஸ்டார்க் வீசிய 37வது ஓவரின் கடைசி பந்தில் சிறப்பாக ஆடிய ஸ்டோக்ஸ் கிளீன் போல்டாகி விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஆட்டமிழந்த ஸ்டோக்ஸ் விரக்தியில் பேட்டை கீழே போட்டு காலால் உதைந்தார். ஒரு தலைச்சிறந்த வீரர் மைதானத்தில் இப்படி செய்தது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


Advertisement