சச்சின், விராட் கோலியை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!

சச்சின், விராட் கோலியை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!



steev-smith-new-achievement

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் ஸ்மித் தனது 24 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். 

தனது 118 ஆவது இன்னிங்சில் 24 ஆவது சதத்தை பூர்த்தி செய்ததன் மூலம் குறைந்த இன்னிங்சில் 24 சதங்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தார் ஸ்டீவ் ஸ்மித். 

steev smith

விராட் கோலி தனது 24 ஆவது சதத்தை 123 ஆவது இன்னிங்சில் அடித்தார். இவருக்கு அடுத்த இடத்தில் சச்சின் 125 ஆவது இன்னிங்சில் 24 ஆவது சதத்தை அடித்ததன் மூலம் 4 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 

டான் பிராட்மேன் இந்த 24 ஆவது வெறும் 66 ஆவது இன்னிங்சில் அடித்து முதல் இடத்தில் உள்ளார். இந்திய அணியின் சுனில் கவாஸ்கர் 128 ஆவது இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டினார்.