விளையாட்டு

"அவர் களத்தில் மட்டும் தான் அப்படி.." கோலி குறித்து மனம்திறந்த ஸ்டார்க்!

Summary:

starc about kholi

கிரிக்கெட் விளையாட்டில் எந்த காலகட்டத்திலும் ஒவ்வொரு எதிரணிகளில் இருக்கும் சிறந்த பேட்ஸ்மென் மற்றும் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர் விளையாடிய காலங்களில் அவருக்கு போட்டியாக எதிர் அணிகளில் வாசிம் அக்ரம், முரளிதரன், வார்னே, மெக்ராத் போன்றோர் இருந்தனர். அதேபோல் இந்த காலகட்டத்தில் விராட் கோலிக்கு சவாலாக இருப்பவர் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க். 

தொடர்புடைய படம்

பொதுவாக மற்ற நாட்டு வீரர்களை விட ஆஸ்திரேலிய அணி வீரர்கள் களத்தில் மிகவும் ஆக்ரோஷமாக செயல்படுவர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் அவர்களுக்கு இணையாக ஆக்ரோஷமாக செயல்படக்கூடியவர். இதனால் எப்போதும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே மோதும் ஆட்டங்கள் மிகவும் பரபரப்புடன் காணப்படும். எந்த சமயத்தில் என்ன நடக்கும் என்ற ஆர்வம் ரசிகர் மத்தியில் குடிகொண்டிருக்கும். 

அப்படிப்பட்ட ஆக்ரோஷமான விராட் கோலியை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க்.

kohli and starc க்கான பட முடிவு

அவர் கூறியுள்ளதாவது "கோலி மீது எந்த விரக்தியும் கிடையாது. அவருடனான உறவு மோசமாகிவிட்டதாகக் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. களத்தில் மோதல் இருப்பது சகஜம்தான். ஆனால், அது களத்தில் மட்டும்தான். தொடர் முடிந்த பின்னர் பலமுறை கோலியுடன் சிரித்துப் பேசியிருக்கிறேன். ஐபிஎல் தொடரில் கோலியுடன் இணைந்து விளையாடியிருக்கிறேன். அதனால், அவரை களத்துக்கு வெளியேயும் நான் அறிவேன். என் சக நாட்டு வீரர்களைவிட கோலியை நான் அதிகம் அறிவேன். கோலி சவாலை விரும்பும் மனிதர். களத்துக்கு வெளியே அவர் முற்றிலும் மாறுபட்ட மனிதர். தனது அணியின் அனைத்து வீரர்களுடனும் கலந்திருக்க விரும்புவார். ஆனால், களத்தில் எல்லா நேரத்திலும் அப்படி இருக்க முடியாது. நாட்டுக்காக விளையாடும்போது ஆக்ரோஷமாக இருப்பதைத் தவிர்க்க முடியாது” என்று கூறியுள்ளார். 

இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் விராட் கோலி எப்படி செயல்படுவார் என பார்ப்பதில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.


Advertisement