இலங்கை அணியில் முக்கிய வீரர் இல்லை.! ஆனாலும் நாங்கள் வலுவாக இருக்கிறோம்.! இலங்கை கேப்டன் ஓப்பன் டாக்.!

இலங்கை அணியில் முக்கிய வீரர் இல்லை.! ஆனாலும் நாங்கள் வலுவாக இருக்கிறோம்.! இலங்கை கேப்டன் ஓப்பன் டாக்.!


srilanka captain talk about his team

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்றிரவு (வியாழக்கிழமை) தொடங்குகிறது. 

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கெதிரான தொடரின் போது இலங்கை அணியின்  சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்காவுக்கு  கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் 3-வது டி20 போட்டி தொடங்கும் முன்பே கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதால் அவர்   டி20 தொடரிலிருந்து விலகினார். தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஹசரங்காவுக்கு  இன்னும் கொரோனா பாதிப்பிலிருந்து மீளவில்லை என்பது தெரியவந்தது. இதனால்  இன்று தொடங்கும் இந்திய அணிக்கெதிரான எதிரான டி20 தொடரிலிருந்து வனிந்து ஹசரங்கா விலகியுள்ளார்.

இதனால் சுழற்பந்துவீசும் ஆல்-ரவுண்டர் ஹசரங்கா இல்லாதது இலங்கை அணிக்கு சற்று பலவீனமாகும். ஆனால் 21 வயதான தீக்‌ஷனாவின் சுழல் தாக்குதல் இந்திய பே்டஸ்மேன்களுக்கு நிச்சயம் சவாலாக இருக்கும். ஹசரங்கா இல்லாதது பின்னடைவு தான். ஆனாலும் நாங்கள் வலுவாகவே இருக்கிறோம். இளம் வீரர்களிடம் மிகச்சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறேன் என இலங்கை கேப்டன் ஷனகா தெரிவித்துள்ளார்.