விளையாட்டு WC2019

முதல் இடத்தை பிடிக்குமா இந்திய அணி! கடைசி லீக் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீச்சு

Summary:

sri lanka won the toss and bat first

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டிகள் இன்று நடைபெறுகின்றன முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளும் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும் மோதுகின்றன. அரையிறுதி அணிகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டாலும் இன்று நடைபெறும் போட்டிகளை பொறுத்துதான் எந்த அணி முதலிடம் பிடிக்கும் என்பது தெரியவரும். எனவே இன்றைய போட்டிகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இந்த போட்டி தான் கடைசி லீக் போட்டி. இலங்கை அணியை பொறுத்தவரை இந்த உலகக் கோப்பையில் இதுதான் கடைசி போட்டி. இந்திய அணி மீண்டும் அரையிறுதியில் ஆட உள்ளது. ஆனால் எந்த அணியுடன் மோதும் என்பதை இன்றைய போட்டிகள் தான் தீர்மானிக்கப் போகிறது. இந்திய அணி முதலிடத்தை பிடித்து நியூசிலாந்து உடன் மோத வேண்டும் எனில் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும். அதே சமயம் ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவுடன் தோல்வியுற வேண்டும்.

இந்த சூழ்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. பொதுவாக இந்த மைதானம் முதலில் பேட்டிங்  செய்பவர்களுக்கு தான் சாதகமாக அமையும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கடினமான மைதானத்தில் இந்திய அணி இரண்டாவதாக பேட்டிங் செய்து வெற்றி பெற்றால் இந்திய அணி அரை இறுதிக்கு செல்வதற்கு முன் அருமையான ஒரு மன உறுதியைக் கொடுக்கும்.

ravindra jadeja க்கான பட முடிவு

இந்திய அணியை பொறுத்தவரை சாகல் மற்றும் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு குலதீப் யாதவ் மற்றும் ரவிந்திர ஜடேஜா களமிறங்குகின்றனர். ஜடேஜாவுக்கு இந்த உலக கோப்பையில் முதல் முறையாக வாய்ப்பு அளிக்கப்படுகிறது.


Advertisement