விளையாட்டு

விராட் கோலியின் சவாலை ஏற்ற ஸ்ரேயாஸ் ஐயர்! வீடியோவை வெளியிட்டு பரபரப்பு

Summary:

sreyas yer accepts kohlis challenge and releases video

உலகக்கோப்பையில் ஆடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு புதிய சாலஞ்சை டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

இந்திய அணியின் கேப்டன் மற்றும் சர்வதேச அளவில் பேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கும் விராட் கோலி சமூகவலைதங்களில் அவ்வப்போது புதிய பதிவுகளை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இந்த முறை கோலி நடனமாடி சக வீரர்களான எபிடி வில்லியர்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஒரு சவாலை விடுத்தார்.

அந்த வீடியோவில் பார்மல் ஷூவை அணிந்து தனக்கு மிகவும் பிடித்த நடனத்தை ஆடி இருந்தார் விராட் கோலி. #SignatureMove என்ற டேக் செய்யப்பட்ட அந்த வீடியோவின் முடிவில் நீங்களும் இவ்வாறு செய்யுங்கள் என குறிப்பிட்ட கோலி, இதே போன்று செய்யுமாறு தென் ஆப்பிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் எபிடி வில்லியர்ஸ் மற்றும் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு சவால் விடுத்தார்.

இந்த சவாலை ஏற்ற ஸ்ரேயாஸ் ஐயர், கோலியை போலவே உடை அணிந்து, தனது புதிய பார்மல் ஷூவை அணிந்து நடனமாடியுள்ளார். விராட் கோலியின் சவாலை ஏற்று அந்த வீடியோவை ஸ்ரேயாஸ் ஐயர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


Advertisement