சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
அந்த 3 முன்னணி வீரர்களின் கலவையாக உருவாவதே லட்சியம் - ஸ்ரேயஸ் ஐயர் ஓபன் டாக்!
இந்திய கிரிக்கெட் ஏ அணியில் இடம்பெற்று வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடி வரும் இளம் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் தான் கோலி, தோனி, ரோகித் ஆகியோரின் கலவையாக உருவாவக வேண்டும் என்பதே விருப்பம் என தெரிவித்துள்ளார்.
24 வயதான ஸ்ரேயர் ஐயர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து 6 சர்வதேச ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக கடந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டார். மேலும் அவரது பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது.
-9yn7a.jpeg)
தற்போது மீண்டும் இந்திய ஏ அணியில் ஆடி வரும் ஸ்ரேயஸ் ஐயர் மீண்டும் இந்திய முதன்மை கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணியில் அவர் எப்படி ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், "கோலி ஒரு மெஷின். அவருக்கு நிறைய ரன் எடுக்க வேண்டும் என்ற வேட்கை எப்போதுமே இருக்கும். அதேபோன்ற வேட்கை எனக்கும் இருக்க வேண்டும். அடுத்து தோனி களத்தில் இக்கட்டான சூழ்நிலையிலும் பொறுமையாக தெளிவான முடிவு எடுக்க கூடியவர். அவரது அந்த குணத்தையும் நான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் ரோகித் சர்மா மிகப் பெரிய இன்னிங்ஸ் ஆடக் கூடய திறமைவ வாய்ந்தவர். அவரது பேட்டிங்கை நான் பலமுறை எதிர்முனையில் இருந்து பார்த்துள்ளேன். அவர் மிகவும் தனித்துவமானவர். அவரது இந்த திறமையும் எனக்குள் உருவாக வேண்டும்.

இந்த மூன்று பேரின் கலவையாக நான் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே என் லட்சியம். நிச்சயம் இந்த திறமைகளை நான் வளர்த்துக் கொண்டால் இந்திய அணியில் நீண்ட காலம் ஆட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.