
some players avoided MSD
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் நேற்று மான்செஸ்டறில் நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் இன்று (புதன் கிழமை) போட்டி தொடரும் என அறிவிக்கப்பட்டது.
நேற்றைய ஆட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியாக இருந்தாலும், பெரும்பாலும் தோனிதான் வீரர்களை வழி நடத்துவார். விராட் கோலியும் முக்கியமான நேரங்களில் தோனியிடம்தான் ஆலோசனை கேட்பார். மேலும் எபோதுமே தோனிதான் கேப்டன் என்று விராட் பேசுவார்.
— King'XCI (@Kingtweetzs) 10 July 2019
ஆனால் நேற்றைய போட்டியில் நடந்த சம்பவம் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நேற்று போட்டியில் பாண்டியா பந்து வீசும் முன் அவரிடம் சென்று விராட் கோலி ஆலோசனை வழங்கினார். பின்னர் கோலி, ரோஹித், பாண்டியா மூன்று பேரும் சேர்ந்து ஆலோசனை செய்தார்கள். அப்போது அங்கு வந்த தோனியை இந்த மூன்று பேரும் கண்டுகொள்ளவில்லை.
நேற்றைய ஆட்டத்தில் பெரும்பாலும் ரோஹித் சர்மா, கோலி இரண்டு பேர் மட்டும்தான் மாறி மாறி ஆலோசனை செய்தனர். ஆனால் வருங்காலத்துக்கு வழி விடும் தலைவன் என ரசிகர்கள் அவர்களை ஆறுதல் படுத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement