பக்காவா பிளான் போடும் சென்னை அணி.. அந்த இரண்டு முக்கிய ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வலை விரிக்கும் சி.எஸ்.கே..

பக்காவா பிளான் போடும் சென்னை அணி.. அந்த இரண்டு முக்கிய ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வலை விரிக்கும் சி.எஸ்.கே..


Smith or max well may join with CSK ipl 2021

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஐபில் மினி ஏலத்தில் சென்னை அணி இரண்டு பிரபலமான வெளிநாட்டு வீரர்களை ஏலம் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபில் போட்டியில் சென்னை அணி முதல் முறையாக முதல் சுற்றிலையே தோல்வி அடைந்து ஐபில் போட்டியில் இருந்து வெளியேறியது. சென்னை அணியின் இந்த மோசமான தோல்விக்கு சென்னை அணியின் மோசமான பேட்டிங் மற்றும் பேட்டிங் தரவரிசை ஒருகாரணமாக அமைந்தது.

இதனால் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபில் போட்டியில் சென்னை அணி தனது அணியில் இருந்து கேதர் ஜாதவ், முரளி விஜய் உள்ளிட்ட 6 வீரர்களை அணியில் இருந்து விடுவித்துள்ளது. அதேபோல் வாட்சனும் ஐபில் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால் வரும் போட்டியில் சென்னை அணி ஒரு வெளிநாட்டு வீரரையும், 7 உள்நாட்டு வீரர்களையும் ஏலத்தில் எடுக்கவேண்டி உள்ளது.

csk

இந்நிலையில் அடுத்த மாதம் தொடக்கத்தில் ஐபில் போட்டிக்கான மினி ஏலம் ஒன்றை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த ஏலம் மூலம் சென்னை அணி இரண்டு பிரபலமான வெளிநாட்டு வீரர்களில் இருந்து ஒருவரை எடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் அல்லது பஞ்சாப் அணியில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட மேக்ஸ்வெல் இவர்கள் இருவரில் ஒருவரை சென்னை அணி எடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் இங்கிலாந்து ஹிட்டர் டேவிட் மாலனும் சி.எஸ்.கே மினி ஏலம் பட்டியலில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.