விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட்டின் நேற்றைய ஆட்டத்தில் ஷிகர் தவான் புதிய சாதனை.!

Summary:

ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்து இரு சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெற்றுள்ளார். 

ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் கடந்த மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. நேற்று நடைபெற்ற 38-வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியது.  துபாயில் நடைபெற்ற இந்தப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் சிறப்பாக விளையாடி 61 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 19 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து, 167 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்சை வீழ்த்தி வெற்றி பெற்றது.

டெல்லி அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளார். ஷிகர் தவான் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த நிலையில், நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்திலும் சதம் அடித்து அசத்தினார். அடுத்தடுத்து சதம் அடித்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்து இரு சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெற்றுள்ளார். 


Advertisement