விளையாட்டு

வெளியானது மாலிக்-சானியாமிர்சாவின் அழகான குழந்தையின் முதல் புகைப்படம்

Summary:

shoib and sania first photo

பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனையான ஐதராபாத்தை சேர்ந்த சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து 2010  ஏப்ரல் மாதம்  திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதை கூறி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்தார்..

இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சானியா மிர்சாவிற்கு கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி அதிகாலை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தையை பிறந்தது.

Related image

சானியா, சோயிப் மாலிக் தம்பதியினர்  தங்களது குழந்தைக்கு, 'இஜான் மிர்சா மாலிக்' என்று பெயர் சூட்டியுள்ளனர். இஜான் என்றால் அரபு மொழியில் ‘கடவுளின் பரிசு’ என்று அர்த்தம். தனது குழந்தையின் பெயருடன் குடும்ப பெயராக ‘மிர்சாமாலிக்’ என்று இணைத்து அழைப்போம் என்று சானியா ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.இதுவரை வெளி உலகிற்கு வெளியிடப்படாத தங்களின் குழந்தையின் புகைப்படத்தை முதல்முறையாக சோயிப் மாலிக் சமூகவலைதளத்தில் இன்று பதிவிட்டுள்ளார். அந்த அழகான குழந்தையின் புகைப்படம் வைரலாகி வருகிறது


Advertisement