
shikhar dhawan wrongly up his bat
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 டி20, 4 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடா் நேற்று தொடங்கியது. பிரிஸ்பைன் நகரில் நடந்த முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் தொடக்கவீரர் ஷிகர் தவான் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். அவர், 27 பந்துகளில் 49 ரன்கள் எடுத்திருந்தபோது, 50 ரன்கள் அடித்துவிட்டதாக நினைத்துக்கொண்டு தவறுதலாக பேட்டை உயர்த்திக் காட்டினார்.
இதனையடுத்து, ஸ்கோர் போர்டை பார்த்த அவர், 49 ரன்களே அடித்திருப்பதைக் கண்டு பேட்டை கீழே இறக்கியுள்ளார். இருப்பினும் தவான் சிறப்பாக ஆடி 42 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
Advertisement
Advertisement