130 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் அஸ்வின் உதவியால் புதிய சாதனை படைத்த ஷான் மார்ஷ்!

130 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் அஸ்வின் உதவியால் புதிய சாதனை படைத்த ஷான் மார்ஷ்!


Shaun marsh worst record

இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆஸி அணியின் ஷான் மார்ஷ் 130 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். 

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 250 ரன்கள் எடுத்தது.  இந்திய அணியின் புஜாரா மட்டும் சிறப்பாக ஆடி 123 ரன்கள் எடுத்தார். 

அதனைத்தொடரந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தார் இஷாந்த் ஷர்மா. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆரோன் பின்ச் ரன் ஏதும் எடுக்காமல் இஷாந்த் ஷர்மா பந்தில் போல்டானார். 

ind vs aus

பின்னர் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய மாரிஸ்,  கவாஜா,  ஷான் மார்ஷ் விக்கெட்டுகளை அஸ்வின் தனது சுழலில் விழவைத்தார். ஆஸ்திரேலியா அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து 59 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. 

முதல் இன்னிங்சின் 28ஆவது ஓரை வீசிய அஸ்வின் பந்தில் ஆஸி வீரர் ஷான் மார்ஷ் போல்டானார். இவர் 19 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். இவர் தொடர்ந்து 6 டெஸ்ட் இன்னிங்ஸில் 10 ரன்களுக்கும் குறைவாக எடுத்துள்ளார். இதன் மூலம் கடந்த 130 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த ஆஸி. வீரரும் செய்யாத மோசமான சாதனையை மார்ஷ் செய்துள்ளார்.  

ind vs aus

மார்ஷ் கடந்த 6 இன்னிங்ஸில் 7,7,0,3,4 மற்றும் 2 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் கடைசி 10 இன்னிங்சில் இவரது சராசரி வெறும் 6.6 மட்டுமே.