எங்களை எதிர்கொள்ள எந்த அணியும் தயாராக இல்லை.. மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் பெருமிதம்!

எங்களை எதிர்கொள்ள எந்த அணியும் தயாராக இல்லை.. மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் பெருமிதம்!


shane-bond-tells-no-one-is-ready-to-beat-mumbai-indians

ஐபிஎல் தொடரின் 12 ஆவது சீசனில் ரோஹித் ஷர்மாவின் தலைமையில் சாம்பியன் படத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அதே பலத்துடன் இந்த சீசனிலும் விளையாடி வருகிறது. புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ள அந்த அணி இன்று நடைபெறும் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.

மும்பை அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலுமே பலம் வாய்ந்த அணியாக உள்ளது. இதே கருத்தை கூறியுள்ள அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட், மும்பை அணியை எதிர்கொள்ள எந்த அணியும் தயாராக இல்லை என கூறியுள்ளார்.

Mumbai indians

இதற்கு கரணம் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான பும்ராஹ் மற்றும் போல்ட் தான். மேலும் பேட்டிங்கிலும் அந்த அணியின் டிகாக், சூரியகுமார் யாதவ், பொல்லார்ட், ஹர்டிக் பாண்டியா என நீண்ட வரிசை உள்ளது.

இதன் காரணமாகவே அந்த அணியை எதிர்கொள்ள எந்த அணியும் தயாராக இல்லை என பாண்ட் தெரிவித்துள்ளார். மேலும் கடைசி லீக் போட்டியில் முன்னணி பந்துவீச்சாளர்களான பும்ராஹ் மற்றும் போல்ட் விளையாடாதது தான் தோல்விக்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.