விளையாட்டு

இந்திய அணியின் படு தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம்..! புலம்பும் ரசிகர்கள்..!

Summary:

Sewag twit about india lost to new zealand

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி T20 போட்டிகளை அடுத்து ஒருநாள் போட்டியில் விளையாடிவந்தது. T20 போட்டியை 5-0 என்ற கணக்கில் வென்று வெற்றி முகத்துடன் ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணிக்கு மூன்று போட்டிகளுமே தோல்வியை தந்துள்ளது.

இதற்கு முன்னர் நடந்த 2 ஒருநாள் போட்டிகளிலும் படுதோல்வி அடைந்த நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று இந்திய அணியை பழி தீர்த்துள்ளது நியூசிலாந்து அணி.

முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியிருந்தாலும், இந்திய அணியின் பந்து வீச்சு சரிவர எடுபடவில்லை. அதிலும் குறிப்பாக, இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் பும்ராவின் பந்து வீச்சு எதிர்பார்த்த அளவு வெற்றியை தேடி தரவில்லை.

இந்திய அணியின் தோல்வி குறித்து டிவிட் செய்துள்ள இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக், பும்ராஹ் அதிக விக்கெட்டுகள் எடுக்காததே இந்த சீரிஸில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

நடந்து முடிந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் 30 ஓவர்கள் வீசியுள்ள பும்ராஹ் மொத்தம் 167 ரன்கள் கொடுத்துள்ள நிலையில் மூன்று போட்டிகளிலும் ஒரு விக்கெட் கூட எடுக்காதது குறிப்பிடத்தக்கது.


Advertisement