BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
என்ன நடந்துச்சு..? போட்டியின்போது மோதிக்கொண்ட பாண்டியா-சாம் கரண்.. வைரல் வீடியோ..
இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பாண்டியா - சாம் கரண் இடையே நடந்த மோதல் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் அடித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 108 ரன்கள் அடித்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிபெற செய்தனர். ஜானி பரிஸ்டோவ் 124 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 99 ரன்களும் அடித்தனர். இந்நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது 46-வது ஓவரை இங்கிலாந்து இளம்வீரர் சாம் கர்ரன் வீசினார்.
அந்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 2 சிக்சர்களும், ரிஷப் பந்த 1 சிக்சரும் விளாசினர். தனது ஓவரில் அதிக ரன்கள் சென்றதால் சாம் கர்ரன் சற்று கோபம் அடைந்தார். இந்நிலையில் அந்த ஓவரின் கடைசி பந்தை ஹர்திக் பாண்ட்யா எதிர்கொண்டபோது, அந்த பால் டாட் பாலாக ரன் ஏதும் இல்லாமல் சென்றது. இதனால் சாம் கரண் பாண்ட்யாவைப் பார்த்து ஏதோ முணுமுணுத்துவிட்டு திரும்பினார்.
இதனை பார்த்து கோபமடைந்த ஹர்திக் பாண்ட்யா, வேகமாக ஓடிவந்து சாம் கர்ரனை திட்டினார். இந்நிலையில் அங்கிருந்த நடுவர் ஓடிவந்து இருவரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
— Simran (@CowCorner9) March 26, 2021
— tony (@tony49901400) March 26, 2021