விளையாட்டு

சச்சினை வெகுவாக கவர்ந்த 10 மாத குழந்தை! மனதார வாழ்த்திய கிரிக்கெட் ஜாம்பவான்

Summary:

Sachin

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக இன்றும் இருந்து வருபவர் சச்சின் டெண்டுல்கர். இளம் வயதிலேயே இந்திய அணியில் இடம்பிடித்த இவர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருந்து வருகிறார்.

இவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம்பிடித்துள்ளார். இந்த கால தலைமுறையினர் சச்சினை ரோல் மாடலாக காட்டி தங்கள் குழந்தைகளுக்கு கிரிக்கெட் கற்றுக்கொடுத்து வருகின்றனர்.

இப்படி சச்சினின் தீவிர ரசிகரான ஆனந்த் மேத்தா என்பவர் தனது 10 மாத குழந்தையான ஸ்ரேஸ்த் மேத்தாவிற்கு சச்சினின் பெயர் மற்றும் நம்பர் 10 பொறித்த கிரிக்கெட் உடையை அணிவித்து புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அவர் "லிட்டில் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சினுக்கு எங்கள் லிட்டில் மாஸ்டரின் சமர்ப்பனம்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் "சச்சின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் எங்கள் மனதிலிருந்து உங்களுக்கு ஓய்வேயில்லை" எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை கண்டு மெய்சிலிர்த்த சச்சின் அழகான புகைப்படங்களுக்கு நன்றி தெரிவித்தும் 10 மாத குழந்தை ஸ்ரேஸ்த்திற்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


Advertisement