விளையாட்டு WC2019

உலகக் கோப்பையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட அதிரடி ஆட்டக்காரர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Summary:

Russel ruled out from worldcup

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் சர்வதேச உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆண்ட்ரூ ரசல் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெறும் என ஆவலோடு எதிர்பார்த்த உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பம் முதலே சற்று சோர்வாக தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மழையின் காரணமாக சில ஆட்டங்கள் தடைபட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதோடு மட்டுமல்லாமல் முக்கிய அணிகளின் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேற்றப்படுவதும் ரசிகர்களை ஏமாற்ற துவங்கியுள்ளது. தொடரின் ஆரம்பத்திலேயே தென்னாப்பிரிக்க அணியின் ஸ்டெயின் விலகினார். அவரைத் தொடர்ந்து இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் விலகினார்.

இவர்களைத் தொடர்ந்து தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரூ ரசல் காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சுனில் ஆம்ப்ரிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டிய ரசல் உலகக்கோப்பை தொடரில் சரியாக ஆடாதது ரசிகர்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

வரும் வியாழக்கிழமை இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் ரசல் ஆடாதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.


Advertisement