ரோஹித் சர்மாவுக்கு அவுட்டே இல்லாமல் அவுட் கொடுத்த நடுவர்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ரோஹித் சர்மாவுக்கு அவுட்டே இல்லாமல் அவுட் கொடுத்த நடுவர்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!


Rohith sharma wicket wrongly given by third umpire

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான ஆட்டம் இன்று நடந்துவருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக KL ராகுல் மற்றும் ரோகித் சர்மா இறங்கினர். இருவரும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். இந்நிலையில் ரோஹித் சர்மா 18 ரன் எடுத்திருந்த நிலையில் அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது.

worldcup 2019

முதலில் நடுவர்களிடம் முறையிட்டபோது நடுவர்கள் விக்கெட் கொடுக்கவில்லை, பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி ரிவியூ மூலம் மூன்றாவது நடுவரை நாடியது. அதில் பந்தானது ஒரே நேரத்தில் பேட் மாற்று காலில் பட்டது.

இதனால் பந்து பேட்டில் பட்டதா இல்லை பேடில் பட்டதா என தெரியவில்லை. குழப்பான நிலையில் மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்துவிட்டார். இது மிகவும் தவறான முடிவு என்றும், ரோகித்சர்மா அவுட் இல்லை என்றும் இந்திய அணி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.