விளையாட்டு

எப்படி விளையாடணும்னு கூட எனக்கு தெரியாது..! அதான் அப்படி விளையாடினேன்.. !ரோஹித் ஷர்மா..!

Summary:

Rohith sharma talks about super over

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்துள்ள மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று முதல் முறையாக நியூசிலாந்து மண்ணில் T20 தொடரை கைப்பற்றியுள்ளது.

நேற்றைய மூன்றாவது ஆட்டம் டிராவில் முடிவடைந்த நிலையில் சூப்பர் ஓவர் முறையில் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது. கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் இரண்டு பந்துகளிலும் இரண்டு சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றிபெற செய்தார் ரோஹித் சர்மா.

இதுகுறித்து அவர் பேசுகையில், சூப்பர் ஓவரில் இதுவரை நான் விளையாடியது இல்லை. இதுவே எனது முதல் சூப்பர் ஓவர் போட்டியாகும். ஒரு ரன் எடுப்பதா? அல்லது அடித்து ஆடுவதா? எப்படி தொடங்குவது என்பது பற்றிய யோசனையே எனக்கு இல்லை.  அதனால் முதல் பந்தில் இருந்து அடித்து ஆடுவது என நானும், கே.எல். ராகுலும் முடிவு செய்தோம்.

எப்படியோ கடைசி பந்தில் வெற்றிபெற்றது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.


Advertisement