விளையாட்டு

வாவ்..!! கையெடுத்து கும்பிட்டு வணக்கத்துடன் தமிழில் பேசி அசத்திய ரோஹித் ஷர்மா..!வைரல் வீடியோ!!

Summary:

இந்திய அணியின் அதிரடி வீரர் ரோஹித் ஷர்மா தமிழில் பேசியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி

இந்திய அணியின் அதிரடி வீரர் ரோஹித் ஷர்மா தமிழில் பேசியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்த ஆண்டிற்கான ஐபில் போட்டிகள் வரும் 9 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியும், விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் சந்திக்கின்றன. இந்த போட்டியானது சென்னையில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஐபில் போட்டி தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நடைபெறும் போட்டியில் விளையாடுவதற்காகவும், பயிற்சியில் ஈடுபடுவதற்காகவும் மும்பை அணி தற்போது சென்னை வந்துள்ளது.

இதனை முன்னிட்டு, "வணக்கம் சென்னை.. மும்பை இந்தியன்ஸ் இங்க வந்துட்டோம்" என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தமிழில் பேசியுள்ளார். தமிழர்களின் முறைப்படி கையெடுத்து கும்பிட்டு வணக்கத்துடன் ஆரம்பித்துள்ள ரோஹித் ஷர்மாவின் இந்த வீடியோவை மும்பை இந்திய அணி தங்கள் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement