விளையாட்டு

செம கியூட்..!! அப்பா போலவே பிள்ளை.!! ரோஹித் ஷர்மாவின் மகள் செய்யும் சேட்டைகளை பாத்திங்களா!!

Summary:

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான வெற்றிகளை பெற்ற இந்திய அணி வீரர்கள் தற்போது

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான வெற்றிகளை பெற்ற இந்திய அணி வீரர்கள் தற்போது IPL T20 போட்டியில் களமிறங்க உள்ளனர்.

இந்த மாதம் 9 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பயிற்சியில் ஈடுபடுவதற்காகவும், போட்டியில் கலந்துகொள்வதற்காவும் மும்பை அணி தற்போது சென்னை வந்துள்ளது.

மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, "வணக்கம் சென்னை.. நாங்க இங்க வந்துட்டோம்.." என தமிழில் பேசியுள்ள வீடியோ ஒன்றை மும்பை அணி நிர்வாகம், தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் ரோஹித் ஷர்மாவை உற்சாகப்படுத்த அவருடன் அவரது மனைவியும், அவரது மகளும் வந்துள்ளனர்.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹெல்மெட்டை தனது தலையில் மாட்டிக்கொண்டு, தனது தந்தை போலவே புல் ஷாட் அடித்துக்காட்டும் மும்பை அணியின் கேப்டான் ரோஹித் ஷர்மாவின் மகள் சமைராவின் கியூட் வீடியோ ஒன்றையும் மும்பை அணி பகிர்ந்துள்ளது.

மேலும் ஹெல்மெட்டில் இருக்கும் மும்பை அணியின் லோகோவை காட்டி, இது என்ன என்று கேட்க, தனது மழலை மொழியில் "மும்பை இந்தியன்ஸ்" என அழகாக கூறுகிறது ரோஹித் ஷர்மாவின் குழந்தை. மழலை மொழியில், சமைரா மிகவும் அழகாக பேசும் இந்த வீடியோ, ஐபிஎல் ரசிகர்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.


Advertisement