என்ன ரோஹித் பந்துவீச நீங்க வந்துடீங்க.. மிரளவைத்த ரோஹித் ஷர்மா.. வைரல் வீடியோ..

என்ன ரோஹித் பந்துவீச நீங்க வந்துடீங்க.. மிரளவைத்த ரோஹித் ஷர்மா.. வைரல் வீடியோ..


Rohith sharma bowls last one ball in 36th over

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய டெஸ்ட் போட்டியின் ஒரு ஓவரின் கடைசி பந்தை ரோஹித் ஷர்மா வீசிய வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், T20 போட்டிகளை அடுத்து தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. முன்னதாக நடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று சம நிலையில் உள்ளது.

இதனால் தற்போது நடந்துவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற இரண்டு அணிகளும் தீவிரமாக விளையாடிவருகிறது. இந்நிலையில் கடந்த போட்டியின்போது இந்திய அணி வீரர்கள் அஸ்வின், விகாரி, பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடமுடியாத சூழல் ஏற்பட்டது.

Rohith sharma

இதனால் நான்கு முக்கிய மாற்றங்களுடன் இன்று இந்திய அணி களமிறங்கியது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாட தொடங்கியது. அப்போது 36வது ஓவரின் 5 வது பந்தை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சைனி வீசியபோது, அவருக்கு தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி பந்தினை வீச முடியாமல் வலியில் துடித்தார்.

இதனை அடுத்து மைதானத்திற்குள் வந்த பிசியோதெரபி சைனியால் தொடர்ந்து பந்துவீச முடியாது என அவரை அழைத்துச்சென்றார். அவருக்கு பதிலாக ப்ரித்வி ஷா மாற்று வீரராக பீல்டிங் இறங்கினார்.

இந்நிலையில் 36 வது ஓவரின் கடைசி பந்தினை வீசுவதற்காக இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான ரோகித் சர்மா வந்தார். எப்போதும் ஸ்பின் பவுலிங் வீசும் ரோஹித் சர்மா, இன்றைய போட்டியில் அவர் ஒரு மீடியம் பேசராக ஒரு பந்தினை மட்டும் வீசி விட்டு சென்றார். தற்போது அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.