இந்தியா விளையாட்டு

#Breaking: இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமனம்.. சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு..

Summary:

#Breaking: இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமனம்.. சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு..

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஒருநாள் கேப்டனாக ரோஹித் சர்மாவை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணியின் கேப்டனாக விராட்கோலி செயல்பட்டுவருகிறார். ஒருநாள் போட்டி, T20 , டெஸ்ட் என முத்தரப்பு போட்டிகளுக்கும் விராட்கோலி கேப்டனாக செயல்பட்டுவரும்நிலையில், தற்போது ஒருநாள் போட்டி, T20 போட்டிகளின் புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மாவை நியமிப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேலும், வரும் ஜனவரி 2022 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டித் தொடரைத் தொடங்கும் விராட் கோலியிடம் இருந்து அவர் பொறுப்பேற்பார் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

அகில இந்திய மூத்த தேர்வுக் குழுவும் ரோஹித் ஷர்மாவை ODI & T20I அணிகளின் கேப்டனாக நியமிக்க முடிவு செய்திருப்பதாக பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.


Advertisement