மனுஷன் ஆசையா பந்துபோட வந்தவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா!! வலியால் துடித்த ரோஹித்!! சிறிதுநேரம் நிறுத்தப்பட்ட ஆட்டம்!! வைரல் வீடியோ..Rohit Sharma leg injury against kkr ipl t20 bowling

ரோஹித் ஷர்மா பந்துவீச வந்தபோது அவரது கணுக்கால் முறிக்கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் அடித்தது.

இதனை அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதன்மூலம் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த ஐபில் சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Rohith sharma

இந்நிலையில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்து வீசுவதற்காக வந்தார். தனது முதல் பந்தை வீசுவதற்காக அவர் ஓடிவரும்போது ரோஹித் ஷர்மாவின் இடது கால் சரியாக தரையிறங்கவில்லை. இதன் விளைவாக, ரோஹித் ஷர்மாவின் கணுக்கால் முறுக்கேறியது.

இதனால் ரோஹித் ஷர்மா வலியால் துடித்தநிலையில் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, பின் அவர் மீண்டும் சரியான பிறகு ஆட்டம் தொடங்கப்பட்டது. மேலும் அந்த ஓவர் முழுவதையும் ரோஹித் ஷர்மாவே வீசினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.