அந்த ஒரு சம்பவத்துக்கு பிறகு அவரும் நானும் 3 வருடங்களாக பேசவில்லை.! மனம் திறந்த இந்திய அணி வீரர்.!

அந்த ஒரு சம்பவத்துக்கு பிறகு அவரும் நானும் 3 வருடங்களாக பேசவில்லை.! மனம் திறந்த இந்திய அணி வீரர்.!


robin-utthappa-talk-about-past-experience

கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதியது. ஆனால் அந்த அரையிறுதியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த கோபத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பின் நடந்த இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில், இந்திய அணியினரைத் தொடர்ந்து சீண்டி வந்தது.

பேட்ஸ்மேன்களுக்கு அடிக்கடி பவுன்சர்கள் வீசுவது, தேவையில்லாமல் இந்திய வீரர்களை இடிப்பது என அந்த தொடர் முழுவதும் இப்படியே இருந்தது. அப்போது ஒருநாள் போட்டி ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹேய்டன் இடையில் சீண்டல் அதிகமாக இருந்தது. அப்போட்டியில் பேட்டிங் செய்துகொண்டிருந்த ராபின் உத்தப்பாவை ஹேய்டன் தொடர்ந்து சீண்டிக்கொண்டிருந்தார்.

இதனையடுத்து உத்தப்பாவும் ஹேய்டனை சீண்டினார். இதனால் உத்தப்பாவிடம் ஹேய்டன் மூன்று வருடங்களாகப் பேசவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து உத்தப்பா கூறுகையில், அந்த தொடரில் இரு அணியினரும் மாறிமாறி சீண்டலில் ஈடுபட்டோம். நான் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது ஹேய்டன் என்னைச் சீண்டும் வகையில் செயல்பட்டார். 

அதேபோல் ஹேய்டன் பேட்டிங் செய்தபோது நானும் சீண்டினேன். அப்போது அவர் என்னைப் பார்த்து ஏதோ சொன்னார். ஆனால் அது எனக்கு சரியாகக் கேட்கவில்லை. போட்டி முடிந்தபின் அவரிடம் பேச முயன்றேன். ஆனால், அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. அதன்பின் 3 வருடங்களாக அவர் என்னிடம் பேசவில்லை. இது வருத்தமான விஷயம்தான். ஆனால் இப்போது நாங்கள் இருவரும் பேசிக்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.