விளையாட்டு

என்னப்பா இப்படிலாம் பந்து போடுற!! இப்படி ஒரு பவுலிங்கை எங்கையாவது பாத்துருக்கீங்களா!! வார்னிங் கொடுத்த நடுவர்.. வைரல் வீடியோ!!

Summary:

ராஜஸ்தான் வீரர் ரியானின் பந்து வீச்சு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

ராஜஸ்தான் வீரர் ரியானின் பந்து வீச்சு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஐபில் சீசன் 14 T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பஞ்சாப்-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் அடித்தது. இதனை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி வெற்றியின் விளிம்பில் வந்து தோல்வியடைந்தனர்.

20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் அடித்த ராஜஸ்தான் அணியினர் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர். ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 119 ரன்கள் அடித்தார்.

இந்நிலையில் முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் ஒரு ஓவர் வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்து அதிரடி வீரர் கெய்யிலின் விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆனால் அந்த ஓவரில் ரியான் பராக் பந்து வீசிய விதம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

ரியான் கெயிலுக்கு வீசிய பந்து ஒன்றை, ஷோல்டரை சுற்றிப் போடாமல், கிடை மட்டமாக, பந்து வீச தெரியாதவர் போல, கையை சரித்து வைத்துக் கொண்டு வீசினார். இதனை பார்த்த கெயில் ஒருநிமிடம் குழம்பி போனார். தொடர்ந்து ரியான் இதேபோன்று பந்து வீசுவதை கவனித்த நடுவர், இதுபோன்று இனி பந்து வீசக்கூடாது என அவருக்கு வார்னிங் ஒன்றைக் கொடுத்தார்.

பின்னர் மீண்டும் சரியாக பந்து வீசி கெயில் விக்கெட்டை கைப்பற்றினார் ரியான். தற்போது அவர் பந்துவீசிய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement